தமிழாயிரம்
20. ஆள்வோர் துணையால் அழிப்பு
1. ஒத்த பிறப்பை ஒழித்தார்; ஒரு நாளும்
ஒத்துவராச் சாதியைத் தந்து.
2.
தந்திரமாய்த் தெய்வத் பிறப்பென்று தாமாகி
மந்திரியும் ஆனார் மதத்து.
3.
மதத்தால் கொழுக்க மறைவேள்ளி செய்யும்
விதத்தால் விழுங்கினார் வீறு.
4.
வீறுற்ற வேந்தா்கள் வீழ்ந்தார்கள்; வேள்விக்குள்
பேறுற்றார், எல்லாமும் பெற்று.
5.
பெற்றபின் கோயில் வழிபாட்டைக் கைக்கொண்டார்
பெற்றார் அருச்சகப் பேறு.
6.
அருச்சகப் பேற்றினால் ஆலயத்தை முற்றாய்ச்
சுருட்டினார் இன்று வரை.
7.
வரைதந்த வண்டமிழ் வாசகம் வாரம்
திரைதந்து மூடினார் தீா்த்து.
8.
தீா்த்தார் குடும்பத்துச் செய்யும் சடங்குகளைப்
போர்த்தார் வடமொழிக்குப் பெய்து.
9.
பெய்யும் மழையைப் பெறுவிக்கும் வேள்வியும்
செய்தார் பெருகப் பறித்து.
10. பறித்தாலும் பாராள்வோர் பக்க இருப்பால்
வெறித்தார் தம்வேந்தா்க்கு மேல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக