வியாழன், 19 ஏப்ரல், 2018

அயராது சாதிக்கும் அழகப்பா பல்கலைக்கழகம்


தலையங்கம்
தி.பி.2048 (கி.பி.2017) புரட்டாசி  திங்கள்
தேன் - 2                                                         துளி-16

அயராது சாதிக்கும் அழகப்பா பல்கலைக்கழகம்




          பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தர மதிப்பீட்டு அடிப்படையில் இந்திய நாட்டின் அறுபது உயா்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது.  60 நிறுவனங்களில் 25 முதல்தரவகைப் பல்கலைக்கழகங்களும், 27 இரண்டாம் தரவகைப் பல்கலைக்கழகங்களும்,  8 தன்னாட்சிக்கல்லூரிகளும் இதில் அடங்கும்.
          25 முதல் தரப் பல்கலைக்கழகங்களில் 2 மத்திய பல்கலைக்கழகங்களும், 12 அரப்பல்கலைக்கழகங்களும், 11 நிகா்நிலைப் பல்கலைக்கழங்களும் இடம் பெற்றுள்ளன.  இதில் 12 அரசுப் பல்கலைக்கழங்களில்  தேசிய தர மதிப்பீட்டு குழும (NAAC) மதிப்பீட்டுப் புள்ளிகள் அடிப்படையில் 3.68 புள்ளிகள் பெற்று கொல்கத்தா ஜாதவ்பூா் பல்கலைக்கழகம் முதலிடத்திலும், 3.68 புள்ளிகள் பெற்று தமிழ் நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது.
          தன்னாட்சி அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள் தானாகவே புதிய துறைகள், மையங்கள், பாடப்பிரிவுகள் தொடங்கலாம், புதிய ஆராய்ச்சி  பூங்காக்கள், பல்கலைக்கழக சமூக தொடா்பு மையங்கள் மற்றும் தனியாருடன் இணைந்து புதிய பாடப் பிரிவுகள் தொடங்கிட பல்கலைக்கழக நிதி நல்கைக்  குழுவின் அனுமதி தேவையில்லை.  பன்னாட்டு அறிஞா்கள், பேராசிரியா்களைப் பணியமா்த்திக் கொள்ள, வெளிநாட்டு மாணவா்களை எந்தப் தடையுமின்றி பயில அனுமதிக்கலாம்.  உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு இணைந்து புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய நல்வாய்ப்புகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ள நம் அழகப்பா பல்கலைக்கழகத்திற்குக் கிடைத்திருப்பது பல்கலைக்கழகத் துணைவேந்தா், பதிவாளா்,  பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலகப்பணியாளா்கள் போன்றோரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
          மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பெற்ற தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு (NIRF) கடந்த ஆண்டு வெளியிட்ட தரவரிசையில் 97-ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்த அழகப்பா பல்கலைக்கழகம் இவ்வாண்டு 70 இடங்கள் முன்னேறி 27 வது தரவரிசையைப் பெற்றிருப்பது இமாலய சாதனையாகும்.
          மேலும் நம் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநா் பேரா.சே.செந்தமிழ்ப்பாவை அவா்களுக்கு இலக்குவனார் இலக்கியப் பேரவை “தொல்காப்பியா்” விருது அளித்துள்ளமையும், மலேசிய சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மலேசியாவில் கடந்த மாதம் கருத்தரங்கம் நடத்தியதன் மூலம் அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று கருத்தரங்கம் நடத்திய முதல் பேராசிரியா் என்ற பெருமையை பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
சாதனைகள் தொடர உளமார வாழ்த்துகிறோம்.
                                                                                                    இப்படிக்கு,
                                                                                          தேமதுரம் - ஆசிரியா்குழு


ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
மீனாட்சி

துணையாசிரியர்
பெ.குபேந்திரன் 

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
தே.தீபா
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,

காரைக்குடி-3. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக