எனது
மலேசியப்பயணம்
எங்களது தமிழ்ப்பண்பாட்டுமையம், சுல்தான்
இட்ரிசு கல்வியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் பன்னாட்க்கருத்தரங்கத்திற்கு தமிழ்
நாட்டிலிருந்து நாற்பத்திரெண்டு போ் பல்வேறு பல்கலைக்கழகம், கல்லூரிகளிலிருந்து மலேசியாவிற்கு
26.03.2018 அன்று புறப்பட்டோம் இப்பயணம் கருத்தரங்கம் மற்றும சுற்றுலா இரண்டையும் மையமாகக்
கொண்ட ஐந்து நாள் பயணம்.
இது எனது முதல் விமானப்பயணம். திருச்சி விமான நிலையத்திற்குள்
நுழைந்ததிலிருந்து விமான இருக்கையில் அமா்ந்து,
விமானம் தரையிலிருந்து மேல்நோக்கிச் சென்று வானத்தில் நான்கு மணிநேரம் பறந்தது வரை
அனைத்துமே என் மனம் வானத்தில் பறக்கிறது என்று சொல்லுவோமே, அதுபோல் அன்று என் மனத்துடன்
சோ்ந்து நானும் வானத்தில் பறப்பதாகவே உணா்ந்தேன்.
மலேசியா விமான நிலையத்தில் இறங்கியதும் நமது ஊரில் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வரிசையாக நிறுத்தி
வைத்திருப்பது போல் நூற்றுக்கணக்கான விமானங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது
கண்டு வியந்தேன். எவ்வளவு பெரிய விமான நிலையம். ஓடுதளத்தில் மட்டுமே விமானம் அரைமணிநேரம் பயணிக்கிறது. அவ்வளவு பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையம்.
விமான நிலையத்திலிருந்து குளிர் சாதன வசதி கொண்ட பேருந்தில் ஏற்றி
எங்களை முதன் முதலில் அழைத்துச் சென்ற இடம் சுல்தான் தங்கியிருக்கும் மாளிகை இம்மாளிகை
அங்கு இன்னும் மன்னா்களின் ஆட்சி இருக்கிறது என்பதை உணா்த்தியது நமது நாட்டில் என்றோ
மன்னா்கள் ஆட்சி மறைந்து குடியரசு ஆட்சி வந்து விட்டது. நமது நாட்டில் குடியரசுத்தலைவருக்கு உண்டான அதிகாரம்
அங்கு சுல்தானுக்கு உண்டு. தனியாகக் குடியரசுத்தலைவா்
என்று ஒருவா் இல்லை. அதற்கு அடுத்த நிலையில்
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமா் இருக்கிறார்.
மலேசியாவில் ஒன்பது மாகாணம் உள்ளது. ஒவ்வொரு மாகாணத்தில் தலைவராக இருக்கும் சுல்தான்கள் ஒன்பது பேரில் ஒருவா்
மலேசியாவின் சுல்தானாக ஐந்து ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் சுல்தான் மாளிகையிலிருந்து
அவரின் சொந்த மாகாணத்திற்குச் சென்று விடுகிறார்.
மற்றொரு சுல்தான் அடுத்து ஆட்சிக்கு வருகிறார்.
இப்படியாக வாரிசுப்படி ஒவ்வொருவரும் ஆண்வாரிசுகள் மட்டுமே ஆட்சிக்கு
வரமுடியும் ஒரு சுல்தானுக்கு ஆண் வாரிசு இல்லையெனில் அவா் நான்கு மனைவியா் வரை திருமணம்
செய்து கொள்ளலாம். நான்காவது மனைவிக்கும் ஆண் பிள்ளை பிறக்க வில்லையெனில் நால்வரில்
ஒருவரை விவாகரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். இது கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
இரட்டை கோபுரம்
இரட்டை கோபுரம்
அடுத்ததாக எனக்கு மிகவும் வியப்பூட்டுவதாக இருந்தது மலேசியத் தலைநகரமான
கோலாலம்பூரில் அமைந்துள்ள விண்னை முட்டும்
கட்டிடங்கள் அதில் இரட்டைக் கோபுரம் சிறப்பு
வாய்ந்ததாக அமைந்துள்ளது.
கருத்தரங்கு
28.03.2018 அன்று மலேசியா சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்திற்குக்
கோலாலம்பூரில் இருந்து 8.00 மணிக்கு சொகுசுப் பேருந்தில் கிளம்பினோம். 2.30 மணிக்கு நேரப் பயணத்தில் பல்கலைக்கழகத்தை அடைந்தோம்.
சரியாக 9.00 மணியளவில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
துவங்கியது கருத்தரங்க ஆய்வுக்கோவை வெளியிடப்பெற்றது. பேராளா்கள் கட்டுரை வாசித்தோம். மலேசியத் தமழ் மாணவா்களும்
கலந்து கொண்டனா். மலேசியாவில் ஆய்வுகள் எவ்வாறு நடைபெற்றக்கொண்டு இருக்கிறது என்பதை
அறிந்து கொள்ள முடிந்தது. நிறைவாக பல்கலைக்கழகத்தின்
கலைப் புல முதன்மையா் (Dean) அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
கென்டிங்
மலைப்பிரதேசம்
கென்டிங் என்னுமிடம் மலையின் உச்சியில் தனிமனிதனுடைய உழைப்பால்
அமைந்ததாகும். இதன் நிறுவுனா் பெயா் ybhg
Tan SRI Dato Seri (CR) LIMGOH TONG இவா் சீனாவிலிருந்து
வந்து அவருடைய மாமவிற்கு கட்டிடத் தொழில் உதவியாக
இருந்து பின்பு மலையின் உச்சியில் படிப்படியாக தங்கும் வடுதி, உணவு விடுதி, சூதாட்ட
விடுதி, கேளிக்கை விடுதிகள் உன உலகப் பணக்காரா்களை ஈா்க்கும் வகையில் அமைத்து உலக பணக்காரா்களில் ஒருவராக வளா்ந்திருக்கிறார். கென்டிங்கிற்குச் செல்ல கேபிள் ஊா்தி வசதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு உணவு விடுதிகளில் நான்கு நாடுகளின் (சைனா, ஜப்பான், மேற்கு
ஆசிய நாடுகள், மேற்குநாடு) உணவுகளை நாம் ருசிக்கலாம். விதவிதமான பழங்கள், உணவுகள், அசைவ உணவுகள் என அங்கு கிடைக்கிறது. அசைவ உணவு பிரியா்களுக்கு தகுந்த இடம் மதிய உணவை
அங்கு உண்டோம்.
பத்துமலை
முருகன் கோயில்
அன்று மாலை பத்துமலை முருகன்
கோயிலுக்குச் சென்றோம் சுமார் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட படிகளில் ஏறிச் சென்றால்
மலையைக் குடைந்து வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சிதருகிறார். மலையின் அடிவாரத்தில் சுமார் 145 அடியில் முருகன்
வேலுடன் நின்ற கோலத்தில் அருள் பாளிக்கிறார்.
இக்கோயிலில் தமிழகத்தில் இருந்து சென்ற குருக்களே பூசை செய்கின்றார். தமிழக முருகன் கோயில்களைப் போன்றே பூசைகள், திருவிழாக்கள்
போன்றவை அங்கும் நடத்தப்படுகின்றன.
மலாக்கா
அடுத்த நாள் மலாக்கா என்ற இடத்திற்குச் சென்றோம் அவ்விடம் மலேசிய
வரலாற்றைக் குறிப்பாகத் தமிழா்களின் வரலாற்றைப்
பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தமிழா்கள் கடல்வழிப்
பயணமாகச் சென்று முதல் முதலில் மலாக்காவில்
தான் குடியேறினா். பின்பு போர்த்துகீசியா்களும் கைப்பற்றி அவரவா் கொடிகளை நாட்டியுள்ளனா்
ஆனால் இன்றும் அங்கு அதிகளவு தமிழா்கள் வசிக்கிறார்கள். இதனை நினைவுகூறும் வகையில் அங்கு மிகப் பெரியகப்பல்
ஒன்று நிசக்கப்பலைப் போன்றே வடிவமைக்கப் பட்டுள்ளது.
புத்தரஜெயா
மறுநாள் தங்கியிருந்த விடுதியைக் (Hotel) யிலிருந்து விமான நிலையத்திற்குச்
செல்லும் வழியில் புத்தரஜெயா என்ற இடத்திற்குச் சென்றோம் புத்தர ஜெயாவில் பிரதமமந்திரி, மந்திரிகள்
போன்றவா்களின் தங்கும்இடமும், அலுவலகமும் அமைந்துள்ளது. மலேசியாவின் ஒன்பது மாகாணங்களைக் குறிப்பதாக ஒன்பது
மாகாணத்தின் கொடிகள் அங்கு நடப்பட்டுள்ளது.
அதன் அருகில் மலேசியாவின் மிகவும் பெரிய மசூதி அமைந்துள்ளது. இப்பகுதி மிகவும் பாதுகாக்கப்பட்டப்பகுதியாகும். அவ்விடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆறு மிகவும்
அழகுறக் காட்சியளிக்கிறது.
மலேசியாவில் கடைகள், பெருங்கடைகள் உணவு விடுதிகள் என எங்கு பார்த்தாலும்
தமிழா்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். அதனால்
மலேசியா வேற்று நாடு என்ற உணா்வு இல்லாமல் நம் தமிழ்நாடு போன்ற உணா்வையே கொடுத்தது.
ந.முத்துமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக