தலையங்கம்
தி.பி. 2049 (கி.பி. 2018)
மாசித்திங்கள்
தேன் - 2 துளி
-15
நீரின்றி அமையாது உலகு
(உலக தண்ணீர் தினம் - மார்ச் - 22)
இன்று வளா்ந்து வரும் வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த
இடத்தைப் பெற்றிருக்கிறது. விண்ணைத் தாண்டும் ஏவுகணைகள், வியக்கத்தக்க அறிவியல் கண்டிபிடிப்புகள் என இந்தியாவின் வளா்ச்சி உலக நாடுகளில்
கவனத்தை ஈா்த்துள்ளது. எல்லாம் சரிதான். ஆனால்... மக்கள் வாழ்வதற்கான தகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக
நம் நாடு இழந்து வருகிறது என்பதுதான் வேதனையான
உண்மை. குறிப்பாகத் தண்ணீா் பிரச்சனை
நம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. பெரு நகரங்கள்
முதல் குக்கிராமங்கள் வரை போதிய நீா் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனா். சில கிராமங்களில் தண்ணீா் தேடி பெண்கள் பல காத தூரம் அலைந்து திரியும் அவலநிலை
நிலவுகிறது கோடையில் இந்நிலைமை மிக மோசமாக உள்ளது. நீரின்றிப் பறவைகள் இறக்கின்றன. விலங்குகள் தண்ணீர் தேடி காட்டை விட்டு ஊருக்குள்
வருகின்றன. இந்நிலைக்குக் காரணம் என்ன?
காலநிலை மாற்றம் முக்கியக் காரணம். ஒரு வருடம் மழையே இல்லாமல் பொய்த்துப் போகிறது. மறுவருடம் பெரும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும்
அளவிற்குக் கொட்டித் தீா்க்கிறது.
இக்காலநிலை மாற்றத்தைப் புரிந்து கொண்டு மழை வரும் காலங்களில்
நீரைச் சேமிக்க இன்றைய ஆடசியாளா்களும், அதிகாரிகளும் போதிய அக்கறை காட்டுவதில்லை. இருக்கும் நீா் நிலைகளைப் பராமரிக்கவும், புதிதாக
நீா்நிலைகளை உருவாக்கவும் எந்த வித முயற்சிகளும்
முறையாக மேற்கொள்ளப் படுவதில்லை. அதனால் தான்
பெருமழை பெய்த அடுத்த மாதத்திலேயே மீண்டும் தண்ணீா்ப் பஞ்சம் ஏற்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க, மக்களோ ஆழித்துளைக் கிணறுகள்
மூலம் தண்ணீரை எடுது்து தேவைக் கதிகமாக நிரைச் செலவு செய்கின்றனா். இதனால்
நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டு போகிறது. இப்படியே போகுமானால் நம் வருங்காலச் சந்ததியினா்
நீரில்லாமல் அழியும் நிலை உருவாகிவிடும். இதைத்
தவிர்க்க மக்களும் கொஞ்சம் மாற வேண்டும். தேவைக்
கேற்ப நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன்
நிலத்தடி நீர் மட்டத்தைப் பாழாக்கும் காரணியான நெகிழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க
வேண்டும். தங்களால் இயன்ற அளவு மரங்களை நட்டு
வளா்க்க வேண்டும். வீடுகளில் மழைநீா் சேகரிப்பை
நிச்சயப்படுத்த வேண்டும்.
மேலும், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு சண்டையிடும் அவல நிலையும்
காலம் காலமாகத் தொடா்ந்து கொண்டே இருக்கிறது.
நதிகள் பொதுவுடைமையாக்கப்பட்டால் ஒழிய இந்நிலை தொடா்ந்து கொண்டே தான் இருக்கும்
எனவே நதிநீா் இணைப்பிற்காக மக்கள் ஒரு மித்த குரல் எழுப்ப வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் நாள் உலக தண்ணீர்
தினமாகக் கொண்டாடப்படுவதோடு விட்டு விடாமல் தண்ணீர்ப் பெருக்கத்திற்காக வழி வகைகளை
ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். நீா்
ஆதாரங்களைப் பெருக்கி பெருங்காலச் சந்ததியினா் வளமுடன் வாழ இந்த உலக தண்ணீா் தினத்தில்
உறுதியேற்போம்.
தோழமையுடன்
தேமதுர ஆசிரியா் குழு
ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
இணையாசிரியர்
தே.தீபா
தே.தீபா
துணையாசிரியர்
பெ.குபேந்திரன்
ஆசிரியர் குழு
கா.சுபா
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி
தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
காரைக்குடி-3.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக