தமிழாயிரம்
1.
கணித்தான் மொழிக்கடன் காத்தான் தமிழால்
பிணைத்தான் நிலஎல்லைப் பேறு.
2.
பேறெல்லாம் வாய்த்திருத்தும் பேணாமல் விட்டதனால்
கூறெல்லைக் கூறு முறை.
3. முறையை விலக்கும் குறிக்கோள் இலாமல்
நிறைய இழந்தோம் இழப்பு.
4.
இழந்ததை மீட்குட் திறமோ இருப்ப
திழவாமல் காத்தலோ இல்.
5.
இல்லா ஒருமை இழப்புதற் கல்லாமல்
காக்க உதவுமோ காண்.
6.
கண்டாலும் காணாமல் போகும் கயமையை
விண்டாலும் ஆகா விடிவு.
7.
விடிநாள் வருமென்ன வீழ்வின்றிக் காத்ததால்
முடியாமல் போகாது முன்.
8.
முன்னிற்கும் நோ்பகை மூண்டெரிக்கும் ஆரியம்
பின்னிற்கும் ஆங்கிலமும் ஆம்.
9.
ஆமாம் திருவிடமோ தீருா விடமாகும்.
போமா றறிந்து புதை.
10.
புதைக்குள் விழுந்தோம் புதைமூடி மேலே
உதைத்தெழுந் தோங்குவோம் ஓா்ந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக