திங்கள், 19 பிப்ரவரி, 2018

தமிழாயிரம்

தமிழாயிரம்
15. சொல்நிலை

1.       தெளிவாகச் சொன்னால் திரட்டுநூல் செய்த
          ஒளியாளர் தொல்காப் பியா்.
2.       காப்பியா் தோ்ச்சியால் எல்லாச்சொல் லும்பொருள்
          பூப்ப தெனல்முழு மெய்.
3.       மெய்யதைக் காண விழித்ததும் தோன்றாதாம்
          உய்த்தாய்ந்து கொள்ள உறும்.
4.       உறுபொருள் காணற் கொருப்பட்ட ஆய்வன்
          பெறலரிய பெற்றவக்கும் பேறு.
5.       பேறாகப் பெற்றானும் பேணித் தெரியானேல்
          வேறாக எண்ணுதல் வீண்.
6.       வீண்படுதல் செந்தமிழ்ச் சொல்லதில் இல்லென்ப
          பூண்டாய்தல் தக்கதெனப் போற்று.
7.       போற்றினால் முற்றாய்ப் பொலிவுறக் காண்பரால்
          ஏற்றவை எல்லாமும் ஏற்று
8.       ஏற்றம் தமிழா்க் கினிய மொழிக்காப்பே
          மாற்றும் அயற்சொல்லை நீக்கு.
9.       நீக்கா தயற்சொல்லை நேரும் கடப்பாடேல்
          ஆக்கத் தமிழ்நெயியில் ஆக்கு.
10.     ஆக்காது விட்டால் அடுகளப் போரைநீ
          காக்காது விட்டாய் கணி.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக