திங்கள், 19 பிப்ரவரி, 2018

புறநானூறு, 90. (பொருநரும் உளரோ, நீ களம் புகினே?)

புறநானூறு, 90. (பொருநரும் உளரோ, நீ களம் புகினே?)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: தும்பை.
துறை : தானை மறம்.
=====================================

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?

அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய,
அரிமணல் ஞெமரக், கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை

வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண்கொண்டு சிலைக்கும்

பொருநரும் உளரோ, நீகளம் புகினே?
அருஞ்சொற்பொருள்:-
உடைதல் = தகர்தல், பிளத்தல்
வளை = வளையல்
கடுப்பு = ஒப்பு
அடை = இலை
மல்குதல் = நிறைதல், செழித்தல்
குளவி = காட்டு மல்லிகை
சாரல் = மலைப்பக்கம்
உடல்தல் = கோபங்கொள்ளுதல், பகைத்தல்
கணம் = கூட்டம்
மருளல் = மயங்குதல்
விசும்பு = ஆகாயம்
மாதிரம் = திசை
ஈண்டுதல் = நிறைதல் (சூழ்தல்)
பார் = நிலம்
இயங்கிய = புதைந்த
சாகாடு = வண்டி
ஆழ்ச்சி = தாழ்ச்சி, பதிவு, அழுந்துகை
சொலிய = நீங்க, பெயர
ஞெமிர்தல் = பரத்தல்
பக = பிரிய
பகடு = காளைமாடு
எழுமரம் = கணையமரம்
வழு = தவறு
மழவர் = வீரர்
இரு = பெரிய
சிலைத்தல் = ஒலித்தல், சினங்கொள்ளுதல்.
இதன் பொருள் :-
          உடைந்த வளையல்களைப் போல் மலர்ந்த வெண்காந்தளும், இலைகள் நிறைந்த காட்டு மல்லிகையும் மணக்கும் மலைச்சரிவில் வலிய புலி தாக்கின் மான் கூட்டம் அங்கே எதிர்த்து நிற்குமோ? கதிரவன் சினந்தெழுந்தால், மயங்கிய ஆகாயத்திலும் மற்ற திசைகளிலும் இருள் சூழ்ந்து இருக்குமோ? பாரம் மிகுதியால் பண்டங்களைச் சுமந்து செல்லும் வண்டியின் அச்சு தரையில் இடித்துச் செல்லவும், நீரலைகளால் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும் கல் பிளக்கவும் பெருமிதத்தோடு வண்டியை இழுத்துச் செல்ல வல்ல காளைக்குப் போக முடியாத வழியும் உண்டோ? முழந்தாள் வரை நீண்ட, கணையமரம் போன்ற, குற்றமற்ற வலிய கைகளையுடைய மழவர் தலைவனே! நீ போர்க்களம் புகுந்தால் உன் பெரிய நிலத்தை கவர்ந்து கொண்டு ஆரவாரம் செய்யக்கூடிய வீரரும் உளரோ?

பாடலின் பின்னணி:-
          ஒரு சமயம், பகைவர்கள் தன்னோடு போர் புரியக் கருதுகின்றனர் என்று அதியமானுக்குத் தெரிய வந்தது. போரின் விளைவுகளை அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவ்வையார், “ புலி சினந்தால் மான்கள் உயிர் தப்ப முடியுமா? ஞாயிறு சினந்தால் இருளும் உண்டோ? மிகுந்த பாரத்தைப் பெருமிதத்தோடு இழுத்துச் செல்லும் காளை போக முடியாத வழியும் உண்டோ? அது போல், நீ களம் புகுந்தால் உன்னை எதிர்த்துப் போரிடக் கூடிய பகைவரும் உளரோ?” என்று கூறி அதியமானை ஊக்குவிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-
          “வளையுடந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்” என்று வேறு நூல்களிலும் (மலைபடுகடாம், 519) குறிப்பிடப்படுவதால், சங்க காலத்தில் வளையல்கள் சங்கு அல்லது முத்து போன்ற வெண்ணிறமான பொருட்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
          சிவனும், "உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள்'' என்றார். விஸ்வாமித்திரரும், வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை எடுத்துக் கூறினர் "இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும். அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள். தலையில் சுமக்க கடினமாக இருக்கும். எனவே, ஆகாயத்தில் இதை நிலை நிறுத்தி வையுங்கள்'' என்றார். உடனே விஸ்வாமித்திரர் "நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன். அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும்'' என்றார். ஆனால், பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்று கொண்டிருந்தது. வசிஷ்டர் தன் பங்குக்கு, " அரை மணி நேரம் நல்ல விஷயங்கள் பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன். இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும்'' என்றார். 

          இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து தன் தலையில் மீண்டும் வைத்துக் கொண்டு, "நல்லது....நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்து விட்டது... போய் வரலாம்''என்றார்.

"கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு
சொல்லாமல் வழியனுப்பினால்
எப்படி?''என்றனர் ரிஷிகள் இருவரும்
          ஒருமித்த குரலில். "உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி, அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா!. *நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே, தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது''* என்றார் ஆதிசேஷன்..
*எனவே நல்ல உயர் ஞானம் நல்கும் விசயங்களை மட்டும் பேசுவோம், பகிர்வோம்..!!!

அ.ரா.பானுப்பிரியா

1 கருத்து: