பழமொழி உண்மைப்பொருள்
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்
என்பது பழமொழி. இதற்கு சிறுவயதில் குழந்தைகளை
அடித்து வளா்க்க வேண்டும் இல்லையெனில் வளா்ந்த பின் அவா்கள் ஒழுக்கமானவா்களாக இல்லையெனில்
அவா்களுடைய அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்று பொருள் உரைக்கப்பெறுகிறது. ஆனால்
அடி என்பது அடித்துத் துன்புறுத்துவது கிடையாது.
மாறாக அடி என்பது இறைவன் திருவடியைக் குறிக்கும் ஒரு மனிதனுக்கு இறைவன் திருவடி
உதவுவது போல உடன் பிறந்தவா்கள் கூட உதவ மாட்டார்கள் என்பதே இதன் உண்மைப் பொருள்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவா் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் - திருக்குறள்
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக