மனிதப்பிறவி
சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில் இருப்பினும் அதை காலில் தான்
அணிய முடியும். குங்குமத்தின் விலை மிகக் குறைவு. அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். இங்கு விலை முக்கியமாக கருதப்படாது, அதன் பெருமையே
முக்கியமாகக் கருதப்படுகிறது.
உப்பினைப் போன்று கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவனாக
திகழ்பவன் நண்பன்; சர்க்கரை போன்று இனிமையான வார்த்தைகளால் நம்மை புகழ்பவனாக விளங்குபவன்
நயவஞ்சகன், புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும்
இவ்வுலகில் உள்ளதாக வரலாறு இதுவரை காணப்படவில்லை.
இங்கு கோயில்கள், மசூதிகள், திருத்தலங்கள் வேடிக்கையானவை. பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான் ஏழை வெளியில் நின்ற பிச்சை எடுக்கிறான் இவ்வாறாக
அனைவரும் ஏதோ ஒரு வகையில் பிச்சை எடுப்பவராகவே திகழ்கின்றோம்.
காணாத கடவுளுக்கு பங்சாமிர்தம் படைப்பவா்கள், கண்கண்ட கடவுள்களுக்கு (தாய், தந்தை) பழைய சோறும்
கந்தல் துணியும் அளிக்கின்றனா். மித மிஞ்சியவா்கள்
அனாதை இல்லத்திலும், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்களென பிறரிடம் பென்சில் கூட
வாங்க விடாது வளா்த்தோரை பிறரிடம் நீர் அருந்த கூட கையேந்த வைக்கும் அவல நிலையினை அளிக்கின்றனா்.
இத்தகைய நிலையினில் மனிதப்பிறவி சிறப்பானதாகக் காணப்படாத தோற்றம்
ஏனெனில் பிறக்கும் போதும் அழுகை இறக்கும் போதும் அழுகை இடையில் நாடகம்.
தீங்கு விளைவிக்கும் மதுவிற்கும் இடத்திற்கு ஓடுபவன், தன்னைச்
சுற்றி அமுதமாம் பால் விற்பவனை ஓடவிடும் அவலநிலை பாலில் நீர் ஊற்றும் பால்காரனை வஞ்சிப்பவன்,
நீரில் நஞ்சினை கலக்கும் மது பானக்கடைக்காரனை தலைமீது தூக்கி வைக்கும் நிந்தனை ஏனோ!
இவ்வளவே மனித வாழக்கை. இதற்குள் உறவுகளுக்குள் கோபம்; விரோதம்;
வீண்பழி; கௌரவம்; அகங்காரம்; அதிகாரம்; ஆணவம்; கொலை; கொள்ளை; காழ்ப்புணர்ச்சி; எதற்கோ?
எது நமதானதோ அது யார் தடுப்பினும் வந்தே தீரும்; நமதில்லாதது
எச் செயல் மேற்கொள்ளினும் அறவே நெருங்காது, வாழும் வரையானதே வாழ்க்கை! வாழ்ந்து காட்டுவோம்
இனியோராக பிறர் உள்ளத்தில்
-தே.தீபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக