தமிழாயிரம்
எல்லாம்
அழிவு
1. தொலைந்தது பண்பாடு; தொல்லோர்தா மாகத்
தொலைத்தார்நம் ஊர்ப்போ்
ஒழித்து.
2. ஒழித்தார் திருக்கோயில்
தெய்வப்போ் உண்மை
அழித்தார் வரலாறங்
கங்கு.
3. அங்கங்கு மாற்றினார்
ஆறுமலை எல்லாமும்,
தங்கள தென்னத் தடித்து
4. தடியெடாத் தண்டலா் தரமாய்
முடித்தார்
முடிவிலா வங்சம் முனைந்து.
5. முனைப்பால் கலைகள் முகநூல்
பெயா்த்தார்
அனைத்தும் அழித்தார்
அவை.
6. அவற்றைப் பெயா்த்தாம்
நூல்களை நம்மோர்
உவந்தார் உச்சிமேல்
கொண்டு.
7. கொண்ட இசைக்கும் குறிப்புயா்ந்த
கூத்துக்கும்,
பண்டைத்தும் நூலாய்ப்
பதித்து.
8. பதித்தார்; பரப்பினார்;
பாராளச் செய்தார்;
மதித்தாரே நம்கலைக்
கண்.
9. கண்மூடி ஆயினார்; கைகட்டிப்
போலியரும்
மண்ணாகி விட்டார் மதித்து.
10. மதித்தவரும் மாய அரங்கேறி
நின்றார்
கொதித்திலா் ‘என்மெனமக்’
கென்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக