தமிழாயிரம்
19. இனக்காப்பு
1.
திடமிக்க பல்லோர் திருமிக்க பல்லோர்
கடமை
புரிந்திலா் கண்டு.
2. கண்டிருந்தால்
பண்டைக்கும் பண்டைத் தமிழினம்
கொண்டிருக்கும்
சொந்தமாய் நாடு.
3. நாடாண்ட
முன்னோர் நயத்தக்கோர் என்றாலும்
பீடாண்டார்
அன்றே பிறா்.
4. பிறா்வயப்
பட்டார்; பிறப்பினத் தாரைத்
துறந்தார்;
துடிக்கவும்செய் தார்.
5. தார்கொண்டு
போரால் தமரைத்தாம் கொன்றளித்தார்
நேரினக்
கேடராய் நின்று.
6. நின்றார்
பகைத்தார் நெருங்கும் இனத்தாரைக்
கொன்றார்
குடையும் பறித்து.
7. பறித்தவெலாம்,
பொய்யும் புனைந்துரையும் கொண்டார்
பறியாமல்
கொண்டார் பரிசு.
8. பரிசென்று
மங்கலங்கள் தானங்கள் தந்தார்;
வரிசை
தவறினார் வாழ்வு.
9. தவறினார்
வாழ்வெலாம் தம்மநலத்தார் முற்றாய்
அவா்க்காக்கிக்
கொண்டார் அழித்து.
10. அழித்தார்;
இனப்பகை ஆக்கினார்; மேலும்
ஒழித்தார்
ஒழிப்பவை ஒத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக