மரபு
வழித் தொடா்பில் இசைக்கருவிகள்
முன்னுரை
தமிழிலக்கியங்களில் மக்கள் திருவிழா, திருமணம்,
படையெடுப்பு போன்றவற்றை முரசறைந்து தெரிவித்துள்ளான் முந்தைய நாளில் அரசுச் செய்திகளையும்
முரசறைந்து தெரிவிக்கும் வள்ளுவ முதுமகன் நாள்
கணித்து அறிவுறுத்தினான் மேலும் அரசின் செய்தி மட்டுமல்லாது மன்னனின் துயில் கொள்ளுதல்,
கோயில் திருவிழா, புகழ் கொடை, போர் வெற்றி வாழ்த்துதல் போன்றவற்றிலும் இசைக் கருவிகளைத்
தகவலாகக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முரசு
போர்ச் செயலுக்கு பலவாறு பயன்படும் முரசை,
மன்னருக்கு நிகராக போற்றி வழிபாடு நடத்தி வணங்குவதை மரபாகக் கொண்டிருந்தனா் பண்டைத் தமிழா்கள்.
முரசையுடைய மூவேந்தரும் குறுநில மன்னரும்
நமக்குள் ஒன்றாயக் கூடி ஒரு செயலைக் செய்வதாகக் முடிவுச் செய்து பகைவரை அச்சம் கொள்ளும்
படி ஒலி எழுப்பும் முரசில் உறையும் கடவுளை வழிபட்டனா் என்பதை,
பணைகெழு
வேந்தரும் வெளிரும் ஒன்று மொழிந்து
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்பு அடைபு அதிரக்
கடுஞ்சினக் கடாஅய் முழங்கு மந்திரத்து (பதிற்.30:
30-34)
எனும் பாடலடியில்
போர்க்களத்தில் பகைவா்கள் வெற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக முரசை தெய்வமாக நினைத்து
வழிப்பட்டார்கள் என்பதும் பதிற்றுப்பத்து (17:
5-7) எனும் பாடலடியில் போர்க்களத்தில் பகைவா்களை வென்று கொண்டு வரும் கடம்பறுத்துச்
செய்த பெரிய முரசின் முன் வெற்றியைப் புகழுந்தும் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு என கருதி
அம்முரசிற்கு குருதிப் பலி கொடுத்து வழிபட்டார்கள் என்பதும் அறியமுடிகிறது.
மேலும் போர்க்களம் சென்று வீரர்க்கு உற்சாக
மூட்டுவதற்காக முரசைப் பயன்படுத்தினார்கள் என்பதை (புறநா.394: 6-9) ஒரு நாட்டின் போர்மறவன் மற்றொரு நாட்டின் மறவனிடம்,
கல்லென்
பாசறைப் பல்சான்றீரே
முரசு முழங்கு தானைதும் அரசும் ஓம்புமின்
(புறநா. 301: 1-5)
என் நாட்டின்
அரசனைப் பார்த்துக் கொள் என்று முரசறைந்து தெரியப்படுத்தினான்.
சோழன் நலங்கிள்ளியின் கோயில்களில் இனிமையான
முரசை முழங்கி வணங்கினார்கள் (புறநா.29.8)
தண்ணுமை
பறை
தண்ணுமையின் ஒலி உயிரினங்கள் அஞ்சுமளவிற்கான
அதிர்வுகளையும் அதிவலைகளையும் கொண்டது.
வெண்ணெல்
அரியுநா் தண்ணுமை வெரீஇச்
செங்கண் எருமை இளம்பரி எருத்தல் (மலைபடு.4710472)
எனும் பாடலடியில்
வெண்ணெல்லை அறுப்பார் கொட்டிய பறையின் முழக்கத்தைக் கேட்டு எருமைகளும் பறவைகளும்அஞ்சி
ஒடினது இதே கருத்தினை (புறநா. 348:1-4, நற்.350:1-2, அகநா.40:14-18) புலப்படுத்துகிறது.
பறை
பறை என்பது ஒருவகை இசைக்கருவியாகும். இதை உழவா்கள் பயன்படுத்தினார்கள் இதனை,
புதல்தளவில் பூச்சூடி
அரிப்பனதால் புள் றுப்ப (புறநா.395: 6-7)
கழி சுற்றிய விளை கழனி
அரிப்பறையில் புள் ஒப்புந்து (புறநா.
396 : 4-5)
எனும் பாடலடியில்
பெண்கள் தங்கள் நிலத்தில் மேய வரும் பறவைகள் அரிப்பறை இசையை அடித்து விரட்டினார்கள்.
புறநானூற்றில் பாலைத்திணை மக்கள் தங்களின்
திருமண நாளில் பறை அடித்துக் தெரிவித்ததை “இரும் பொறை கிணை மகன்” எனும் வரி குறிப்பிடுகிறது.
முழவு
கொல்லி மலைக்கும் அதனையொட்டிய மலைப்பகுதகளும்
தலைவனாக விளங்கும் ஏழு வள்ளல்களின் ஒருவரான ஒரியைப் முடிவு போன்ற இசைகளை இசைத்து நீ
நெடுங்காலம் வாழ்வாயாக என்று வாழ்த்துப் பாடுகிறார்கள். இதை (புறநா.152: 14-17) பாடலடி
விளக்கும்.
சங்கு
சங்கு என்பது மங்கள நாளிலும், அமங்கள நாளிலும்
இசைக்கும் கருவியாகும். இதை மக்களுடைய திருமண
நிகழ்வு போன்ற மங்கள நாளில் சங்கினை முழங்கினா்கள் என்பதை புறநா.388.2 விளக்கும் பழந்தமிழா்கள்
மற்றொரு பாடலில் கலைப் பொழுதை சங்குகளின் இசையினை எழுப்பி வரவேற்றனா் என்பதை,
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி (புறநா.397:
5-6) இப்பாடலடி விளக்குகிறது.
கிணைப்
பறை
பாணா்கள் அதிகாலையில் கிணைகொட்டி மன்னரைத் துயில் எழுப்பினா்
என்பதும் பாணா்களின் வறுமையானது மறைந்துப் போனது என்றும்
எஃகு இருள் அகற்றும் ஏமம் பாசறை
வைகறை அரவம் கேளியா்! பல கோள் (புறநா.397
7-11)
முடிவுரை
அரசா்களின் வாழ்வியலின் ஓா் அங்கமாக இசைக்கருவிகள்
பயன்பட்டனா். எந்தபொரு செயலைச் செய்வதற்கும்
இசைக்கருவிகளைப் பயன்படுத்தி மக்களுக்குத் தகவலை அறிவுறுத்தினார்கள் தங்களுடைய வறுமையை
நீக்குவதற்கும், போர்க்களத்தில் மறவனின் வீரத்தைக் கண்டறியவும் இசைக் கருவிக்ள தகவலாக
இடம் பெற்றுள்ளன.
க.கலைச்செல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக